News

ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் இன்பராசா என்ற இளைஞன் கைது.

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்திவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த ச.இன்பராசா என்ற 22 வயதுடைய மீனவத் தொழில் ஈடுபடும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வாகனங்களில் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர். குறித்த இளைஞனும் இது போன்று வாகரை பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதுவித குழப்பமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.



இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளார்.



வாழைச்சேனை மேலதிக நிருபர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button