
அரபு நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் இராணுவ தளங்கள், இஸ்ரேலை பாதுகாக்கவே ஒழிய அரபு நாடுகளையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதற்கு இல்லை என்ற பேருண்மையை ஈரான் யுத்தம் அரபு ஆட்சியாளர்களுக்கு புரிய வைத்திருக்கிறது.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எதிரிகளை கட்டமைத்து (கம்யூனிசம்- பாத்யிஸம்- அல்கைதா- ஈரான்) “அச்சுறுத்தல்” பாதுகாப்பு” என்ற பெயரில் ட்ரில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா இந்த நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
ஆனாலும் அமெரிக்க கூட்டணியின் முக்கிய அங்கமான சியோனிசத்தை ஒருபோதும் எதிரியாக கட்டமைத்த வரலாறு இல்லை.
என்னதான் எமது ஆகாய பரப்பை இந்த யுத்தத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அரபு நாடுகள் அறிக்கையிட்டிருந்தாலும், அமெரிக்க/இஸ்ரேலிய விமானங்கள் எந்தவித தங்கு தடையின்றி ஆகாய பரப்பை மாத்திரம் இன்றி, விமான தளங்களையும் தாராளமாக பாவித்து வருகின்றன.
இந்த நிலையில் அரபு நாடுகளின் பிரதான அரசியல் சக்தியான சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் MBS ஐ மிகவும் கீழ்த்தரமாக He didn’t think he would be kissing my ass என பகிரங்கமாக ட்ரம்ப் விமர்சித்திருக்கிறார்.
சவூதி அரேபியாவுக்கே இந்த நிலைமை என்றால் இந்த பிராந்தியத்தின் வேறு நாடுகளை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும், இவ்வாறான ஒரு விமர்சனத்தை இஸ்ரேலின் ஏதாச்சும் ஒரு நகர மேயரை நோக்கிக்கூட முன்வைக்க எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் துணியப்போவதில்லை.
இதே உரையின் இன்னுமொரு இடத்தில் இஸ்ரேலுடன் ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடவில்லை என்றால் சவூதிக்கு நடப்பதே வேறு என்ற தொனியில் மிரட்டுகிறார்.
ஒரே கூட்டணிக்குள் இஸ்ரேலுக்கு இருக்கும் மதிப்பிலும் மரியாதையிலும் எந்த இடத்தில் அரபு நாடுகள் இருக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் தேவை.
“To be an enemy of the United States is dangerous, but to be a friend is fatal”
(அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனாலும் நண்பனாக இருப்பது மரணகமானது)
என்ற அமெரிக்காவின் முன்னால் இராஜங்க செயலாளர் ஹென்றி கிஸ்ஸிஞர் கூறிய வார்த்தைதான் ஞாபகத்திற்கு வருகிறது!



