News
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது – புதிய தலைமை நிதானமாக செயல்படுகிறது – அமெரிக்கப் படைகள் விரைவில் ஈரானுடனான போரில் இருந்து வெளியேறிவிடும் என ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே தங்களது முதன்மை இலக்கு என்றும், அந்த இலக்கு எட்டப்பட்டவுடன் எவ்வித ஒப்பந்தமும் இன்றி அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை மிகவும் நிதானமாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்



