ஐந்த நாட்களாக நுரைச்சோலை மின் நிலையத்தில் தங்கிருந்த எரிசக்தி அமைச்சர் ..

தற்போதைய அரசாங்கத்தின் பெரும்பான்மையினரின் தலையீட்டுடன் இடம்பெற்றுள்ள பாரிய அளவிலான நிலக்கரி மோசடியை மூடிமறைப்பதற்காக, எரிசக்தி அமைச்சர் தற்போது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் சதித்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிசக்தி அமைச்சரின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், மூன்று மாதங்களாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குச் செல்லத் தவறிய அமைச்சர், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து கடந்த ஐந்து நாட்களாக அங்கேயே தங்கியிருப்பதாக வெளிப்படுத்தினார்.
அங்கு தங்கியிருந்து, இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளை மூடிமறைக்க அமைச்சர் ஒரு பெரிய சதியில் ஈடுபட்டுள்ளதாக டி.வி. சானக்க மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதுள்ள மின்சார நெருக்கடிக்கு மத்தியில், இரவு நேரங்களில் பிரதேச சபை மட்டத்திலான வீதி மின்விளக்குகளை அணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், புத்தாண்டு விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு மின் பிறப்பாக்கிகளை (Generators) பயன்படுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள போதிலும், அந்த மின் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரிபொருளையும் அரசாங்கமே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்பதையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.



