News

இந்த வாரம் முதல் புதன் லீவு கேன்சல் –  8ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தும் வழமை போல் நடைபெறும்

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிய நெருக்கடி நிலைமையின் போது எரிபொருள் இருப்பைச் சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து கடந்த மார்ச் 17ஆம் திகதி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button