News
சஜித் கூட்டத்தில் பட்டாசு வெடித்து சிதறல் 07 பொலிஸார் உட்பட 09 பேர் காயம்

07 பொலிஸார் உட்பட 09 பேருக்கு காயம்தீக்காயங்களுடன் 09 பேரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
ஜக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டியில் நேற்று (09) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
ஜக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் ஜக்கிய முன்னணியின் ஆதரவாளர்களால் வெடிக்கப்பட்ட பட்டாசினால், 7 பொலிஸார் மற்றும் இரண்டு பொது மகன்கள் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்துள்ளனத்.

