News
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தத்திற்கும், ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக ஈரான் தெரிவிப்பு – ஹோர்மூஸை திறந்தால் போர் நிறுத்தத்திற்கு நானும் ஒப்புக்கொள்கிறேன் ட்ரம்ப்
ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக இரான் கூறியுள்ளது.
“ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால்” போர் நிறுத்தத்திற்கு இரான் ஒப்புக்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்



