News

முச்சக்கரவண்டி சாரதியின் கவனக் குறைவால் காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாத்திமா அலீதா

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ, நாரிகம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி , தனியார் பஸ்ஸுடன் மோதியதில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


விபத்தில் உயிரிழந்தவர் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற சிறுமியாவார்.


முச்சக்கர வண்டி ஓட்டுநரின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற விதம் CCTV கேமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது. Video > https://www.facebook.com/share/v/1bKuKJANnv/

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button