மதுபோதையில் இருந்த சகோதரனால் நடத்தபட்ட தாக்குதலில் சகோதரி உயிரிழப்பு #இலங்கை

வவுனியா – செக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(08.04.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
கத்திக் குத்துக்கு இலக்கான பெண் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செக்கடிப்புளவில் வசித்து வந்த பவளரத்தினம் செல்வமலர் வயது 56 என்ற பெண்ணே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை மீட்டு அங்கிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



