News

உல‌க‌ வ‌ல்ல‌ர‌சு அமெரிக்காவையும் அத‌ன் ஹ‌*ராங்குட்*டியையும் ஈரான் எதிர்த்து 40 நாட்க‌ள் தாக்கு பிடித்த‌துட‌ன் ப‌ல‌ யுத்த‌ வியூக‌ங்க‌ளை உல‌குக்கு ப‌டிப்பித்துள்ளது – ஈரான் அடிப‌டும்  நாம் கைக‌ட்டி ர‌சிக்க‌லாம் என்று நினைத்த‌ அர‌பு நாடுக‌ள் மீதும் இடி விழுந்துள்ள‌து

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில் 40 நாட்க‌ள் முடிவில் ஈரான் பெற்ற‌ பெருவெற்றி முஸ்லிம் நாடுக‌ளுக்கு ப‌ல‌ ப‌டிப்பினைக‌ளை த‌ர‌ வேண்டும்.

இந்த‌ போரில் ஈரான் ப‌ல‌ இழ‌ப்புக்க‌ளை ச‌ந்தித்தாலும் துணிந்த‌வ‌னுக்கு பொல்லும் ஆயுத‌ம் என்ப‌து போல் ஈரான் உல‌க‌ வ‌ல்ல‌ர‌சையும் அத‌ன் ஹ‌ராங்குட்டியையும் எதிர்த்து 40 நாட்க‌ள் தாக்கு பிடித்த‌துட‌ன் ப‌ல‌ யுத்த‌ வியூக‌ங்க‌ளை உல‌குக்கு ப‌டித்து கொடுத்துள்ள‌து.

த‌ற்போதைய‌ யுத்த‌ நிறுத்த‌த்தை அமெரிக்கா அறிவித்துள்ள‌தான‌து அத‌ன் ச‌ர‌ணாக‌தியை காட்டுகிற‌து.

யுத்த‌ நிறுத்த‌த்தை முறித்து அமெரிக்கா மீண்டும் தாக்க‌லாம். அத‌ன் மூல‌ம் ஈரானின் பொது ம‌க்க‌ளை அழித்து அந்த‌ இர‌த்த‌த்தில் வெற்றி என‌ அறிவிக்க‌லாம். ஆனால் ஆயுத‌த்தால் ஈரானிய‌ ப‌டைக‌ளை அமெரிக்க‌, இஸ்ரேலால் வெல்ல‌ முடிய‌வில்லை என்றே வ‌ர‌லாறு எழுதும்.

அமெரிக்காவை ந‌ம்பி யுத்த‌த்தில் அமெரிக்காவும் ஈரானும் அடிப‌ட‌ தாம் கைக‌ட்டி ர‌சிக்க‌லாம் என்று நினைத்த‌ அர‌பு நாடுக‌ள் மீதும் இடி விழுந்துள்ள‌து.

ஆக‌வே அர‌பு நாடுக‌ள் இனியும் அமெரிக்காவை ந‌ம்பாது ஈரானுட‌ன் புரிந்துணர்வு ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்டு அமெரிக்க‌ ப‌டைக‌ளை வெளியேற்ற‌ வேண்டும்.

அது போல் ஈரானும் அரபு நாடுக‌ளுடன் உண்மையான‌ நேச‌த்தை வெளிப்ப‌டுத்த‌ வேண்டும்.

எந்த‌வொரு முஸ்லிம் நாடும் இஸ்ரேலுட‌ன் பொருளாதார‌, வ‌ர்த்த‌க‌ தொட‌ர்புக‌ளை வைக்காம‌ல் இஸ்ரேலை த‌னிமைப்ப‌டுத்த‌ வேண்டும்.

த‌ம‌து நாடுக‌ளில் உல்லாச‌த்துக்கு அதிக‌ம் ப‌ண‌த்தை செல‌வு செய்யாம‌ல் முடிந்த‌ள‌வு ஈரானின் உத‌வி பெற்று ட்ரோன்க‌ள், ஆளில்லா விமான‌ங்க‌ளை உற்ப‌த்தி செய்வ‌தில் முய‌ற்சிக்க‌ வேண்டும்.

ஏனெனில் என்றாவ‌து ஒரு நாள் இஸ்ரேல் இந்த‌ நாடுக‌ளை தாக்கும் என்ப‌தை ம‌ற‌ந்துவிட‌ கூடாது.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய‌துல் உல‌மா ச‌பை,
இல‌ங்கை உல‌மா க‌ட்சி.

10.4.2026

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button