News

அன்று எம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக ஈரான் அச்சுறுத்தியது… ஆனால், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள் – பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து நெதன்யாஹு கருத்து

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரானுக்கிடையில் தற்போதைய போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அமைதிப் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.



இருப்பினும் அது தோல்வியில் முடிந்த நிலையில், இதுதொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.



“ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்களின் அணு ஆயுதம், ஏவுகணைகளை நசுக்குவதில் வெற்றி கண்டுள்ளோம். இது இன்னும் முடியவில்லை.



பல அமைப்புகளின் உதவியுடன் எமது கழுத்தை ஈரான் நெரித்து சுற்றி வளைக்க முயற்சித்தது. ஆனால், நாம் தான் அதன் கழுத்தை நெரிக்கிறோம்.



நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அச்சுறுத்தினார்கள். ஆனால், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button