News
ஹார்முஸ் நீரிணை சிவிலியன் கப்பல்களின் போக்குவரத்திற்கு திறந்தே உள்ளது – எதாவது இராணுவக் கப்பல் அதனை நெருங்கினால் தாக்கப்படும் என அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் பதிலடி

ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்தது ,
போர் கப்பல்கள் ‘கடுமையாக கையாளப்படும்’ என மேலும் தெரிவித்தது.
சர்வதேச சட்டத்திற்கு இணங்க, சிவிலியன் கப்பல்களின் “தீங்கற்ற போக்குவரத்திற்கு” ஹார்முஸ் நீரிணை “திறந்தே உள்ளது” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதை நெருங்கும் இராணுவக் கப்பல்கள் போர்நிறுத்தத்தை மீறுவதாகக் கருதப்படும் என்றும், அவை “கடுமையாக கையாளப்படும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



