புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற
முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை

புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற
முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை
புத்தளம் வைத்தியசாலையில் கடந்த மார்ச் 25 அன்று முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை (Scoliosis Correction) ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற ஒருசில வைத்தியசாலைகளில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் இவ்வகையான சத்திரசிகிச்சை புத்தளத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒருசில மாதங்களாக முள்ளந்தண்டு சத்திர சிகிச்சைகள் இங்கு இடம்பெற்றுவந்தபோதிலும் முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை, புத்தளம் தள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
புத்தளம் தள வைத்தியசாலை என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் (Orthopedic Surgeon) ஷெஸார் ஹமீத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள சிரேஷ்ட என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர்களான தேசிய வைத்தியசாலையை சேர்ந்த Dr Udai De Silva மற்றும் லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் Dr Nirmal Marasinghe ஆகியோரும் வருகைதந்தனர். நினைவிழக்கச்செய்யும் விசேட வைத்தியராக (Anesthetist) சமிந்த அவர்கள் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
40 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் செலவாகும் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தளவைத்தியசாலைகளில் (Base Hospitals) இதுவரை இந்த சத்திரசிகிசிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறான சத்திரசிகிச்சை புத்தளத்தில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது.
(Dr. Hanan Ahamed, Base Hospital, Puttalam)
පුත්තලම මූලික රෝහලේ සිදු කළ කොදු ඇට පෙල පැති කුදය සෘජුකරණ (Scoliosis correction) ශල්යකර්මය
පුත්තලම මූලික රෝහලේ මාර්තු 25 වන දින කොදු ඇට පෙල පැති කුදය සෘජුකරණ (Scoliosis) ශල්යකර්මයක් සාර්ථකව සිදු කර ඇත. මෙවැනි ශල්යකර්ම සාමාන්යයෙන් කොළඹ, මහනුවර, යාපනය, බදුල්ලසහ රත්නපුර වැනි රෝහල් කිහිපයක පමණක් සිදු කරන අතර, එය පුත්තලම රෝහලේදී සිදූවීම විශේෂත්වයකි.
පසුගිය මාස කිහිපය තුළ මෙම රෝහලේ කොදු ඇට පෙල ආශ්රීත ශල්යකර්ම සිදු කර ඇති නමුත්,කොදු ඇට පෙල සෘජුකරණ ශල්යකර්මයක් මෙහි සිදු කළ ප්රථම අවස්ථාව මෙයයි.
මෙම විකලාංග ශල්ය විශේෂඥ වෛද්ය ෂශාද් හමීඩ් මහතාගේ නායකත්වයෙන් සිදු කරන ලදී. කොළඹ ජාතික රෝහලේ විකලාංග විශේෂඥ වෛද්ය උදායි දි සිල්වා මහතා සහ කොළඹ රිජ්වේ ආර්යා ලමා රෝහලේ විකලාංග විශේෂඥ වෛද්ය නිර්මාල් මාරසිංහ මහතා ද මෙම කාර්යයට සහභාගී වූහ. නිර්වින්දන වෛද්ය (Anesthetist) ලෙස ව්ශේෂඤ වෛද්ය චමින්ද මහතා තම වගකීම සාර්ථකව ඉටු කළේය.
රුපියල් ලක්ෂ 40 කට වැඩි වියදමක් යන මෙම ශල්යකර්මය සම්පූර්ණයෙන්ම නොමිලේ සිදු කරන ලදී. ශ්රී ලංකාවේ මුලික රෝහල් (Base Hospitals) වල මෙවැනි ශල්යකර්මයක් මෙතෙක් සිදු කර නොමැති බවත් විශේෂයෙන් සඳහන් කළ යුතුය.
අනාගතයේදීද මෙවැනි ශල්යකර්ම පුත්තලම රෝහලේ තවදුරටත් සිදු කිරීමට සැලසුම් කර ඇති බව ද වාර්තා වේ.
(Dr. Hanan Ahamed, Base Hospital, Puttalam)
Scoliosis correction surgery performed at Base Hospital Puttalam
A scoliosis correction surgery was successfully carried out at Base Hospital Puttalam on March 25. This type of surgery is usually performed only in few hospitals such as those in Colombo, Kandy, Jaffna, Ratnapura and Badulla, making its performance in Puttalam noteworthy.
Although spinal surgeries have been conducted at this hospital over the past few months, this marks the first time that a scoliosis correction surgery has been performed at Base Hospital Puttalam.
The surgery was carried out under the leadership of Orthopedic Surgeon of BH Puttalam Dr. Shazar Hameed. Orthopedic surgeons from National Hospital of Sri Lanka Dr Udai De Silva & Dr Nirmal Marasinghe from Colombo Lady Ridgeway Hospital also participated in the procedure. The anesthetist, Dr. Chaminda, carried out his duties effectively.
This surgery, which typically costs over 4 million rupees, was provided completely free of charge. It is also significant to note that such a surgery has not previously been performed in Base Hospitals in Sri Lanka.
It is reported that similar surgeries will continue to be conducted in BH Puttalam in the future.
(Dr. Hanan Ahamed, Base Hospital, Puttalam)
© Z.A. Zanhir – 16. 04. 2026


