News

அமைச்சர் லால் காந்தவின் சொகுசு வீட்டுக்கு வாழைப்பழம், அரிசி, கருவாட்டுடன் புத்தாண்டு விஜயம்..

புதிய ஜனதா முன்னணியின் (NJP) தலைவர் திரு. சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர், விவசாய அமைச்சர் திரு. கே.டி. லால் காந்தவின் கடுவெலயில் அமைந்துள்ள தனிப்பட்ட வீட்டிற்கு இன்று காலை புத்தாண்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

திரு. லால் காந்தவின் சொத்துக்கள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்த பண்டார, பத்து வருடங்களுக்கு முன்னர் தனது பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு (Tuition) அனுப்புவதற்கு கூட பணம் இல்லை என்று கூறிய ஒருவர், இன்று 47 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட கோடீஸ்வரராக மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.

லால் காந்த அவர்கள் இப்போது ஒரு சோசலிசவாதியோ அல்லது தொழிற்சங்கத் தலைவரோ அல்ல என்றும், அவர் இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவராக மாறியுள்ளார் என்றும், கடுவெல நகரில் இவ்வாறானதொரு சொகுசு மாளிகையை நிர்மாணிப்பதற்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை அவர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விஜயத்தின் போது, அவர்கள் லால் காந்தவிற்காக ஒரு குலை வாழைப்பழம், தேங்காய், அரிசி, பாய்கள் மற்றும் சில பெஞ்சுகளை (Benches) பரிசாகக் கொண்டு வந்திருந்தனர்.

லால் காந்த இந்த பணத்தை அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை வாவியோரங்களில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களை அச்சுறுத்தி ஈட்டினாரா அல்லது விவசாய அமைச்சின் காணிகளை வர்த்தகர்களுக்கு வழங்கியதன் மூலம் ஈட்டினாரா என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து எதிர்காலத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை நடத்தி, அவற்றை மீண்டும் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு. சுப்பீஸ்வர பண்டார மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button