News
முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான சம்பத் அதுகோரல, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிடிகல, பம்பரவான பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



