News

போர்நிறுத்த காலத்த்தை பயன்படுத்தி இராணுவத்தையும் ஆயுதங்களையும் வலுப்படுத்தி உள்ளோம் – நான் உத்தரவு கொடுத்தால் மீண்டும் தாக்குதல் நடக்கும்

போர்நிறுத்தம் தொடர்பில் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



“இருவார கால போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களை புதுப்பித்துக்கொண்டுள்ளது.



எங்களிடம் போதுமான அளவு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன.



இந்த இடைவெளியில் அவற்றை மேலும் வலுப்படுத்திக்கொண்டோம்.



தற்போது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களுக்கு முழுத் தயாராக உள்ளது.



நான் உத்தரவு கொடுத்தால் மீண்டும் தாக்குதல் தொடரும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button