இலங்கையில் கைப்பற்றப்பட்ட 7,829 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
இலங்கையில் பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட மொத்தமாக சுமார் 355 கிலோ கொக்கேய்ன் நேற்று வியாழக்கிழமை புத்தளம் வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிலையத்தில் அழிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அழிக்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் பெறுமதி ரூ. 7,829 மில்லியன்.
இந்த நிகழ்வில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக உடனடியாக அழிக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து உறுதியளித்துள்ளார்.