நூலிழையில் தவிர்க்கப்பட்ட ஈரான் மீதான அமெரிக்காவின் அணு ஆயுதப் போர்

✍️ முகிந்தன் துரைராஜசிங்கம்
வாஷிங்டனின் அதிகார மையமான வெள்ளை மாளிகையின் மூடிய கதவுகளுக்குப் பின்னால், உலகம் இன்று சுடுகாடாக மாறியிருக்க வேண்டிய ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது.
நாம் இன்று நிம்மதியாக சுவாசித்துக் கொண்டிருப்பதற்குப் பின்னால், ஒரு மிகப்பெரிய அதிகார மோதலும், நூலிழையில் தவிர்க்கப்பட்ட அணு ஆயுதப் போர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி Larry Johnson கசியவிட்டுள்ள அந்தத் தகவல், உலகையே உறைய வைத்திருக்கிறது.
ஈரான் மீதான ஆத்திரத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப், சாதாரண ஏவுகணைகளைத் தாண்டி, ‘அணு ஆயுதப் பிரயோகம்’ (Nuclear Strike) என்ற விபரீத முடிவை கையில் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு தேசத்தையே வரைபடத்திலிருந்து துடைத்தெறியும் அந்தப் பயங்கரமான உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்த அந்த நிமிடம், வரலாற்றின் கருப்புப் பக்கமாக மாறியிருக்கக்கூடும்.
ஆனால், அந்த மரண உத்தரவுக்கும் உலக அழிவுக்கும் குறுக்கே ஒரு மனிதர் நின்றார். அவர்தான் ஜெனரல் General Dan Cain.
என்ன நடந்தது?
முன்னாள் சி.ஐ.ஏ (CIA) அதிகாரியான Larry Johnson சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வெள்ளை மாளிகைக்குள் நடந்ததாகக் கூறப்படும் ஒரு ரகசியச் சம்பவத்தை விவரித்துள்ளார்:
ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, அந்நாட்டின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த டொனால்ட் டிரம்ப் முயன்றதாக கூறப்படுகிறது.
டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு, அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவரான (Chairman of the Joint Chiefs of Staff) General Dan Caine கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இத்தகைய விபரீத முடிவை எடுக்கக் கூடாது என ஜெனரல் டான் கெய்ன் டிரம்பைத் தடுத்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் லாரி ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஜெனரல் கெய்ன், மிகவும் சோகமாகவும், தலையைக் குனிந்தபடியும் வெளியேறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை மாளிகைக்குள் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதையே அந்தப் புகைப்படம் உணர்த்துகிறது.
இந்தச் செய்தி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வந்தாலும், இதில் சில முக்கியமான உண்மைகளை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
அமெரிக்கச் சட்டப்படி, அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் இறுதி அதிகாரம் அதிபரிடம் இருந்தாலும், இராணுவத் தளபதிகள் அது ‘சட்டவிரோதமான உத்தரவு’ என்று கருதினால் அதை எதிர்க்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.
ஈரானின் அணு ஆயுதக் கட்டமைப்புகள் மீது ஏற்கனவே அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது என்பது உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதால் இராணுவம் எச்சரிக்கையாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், உலக நாடுகள் அனைத்தும் ஒரு மாபெரும் அழிவிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளன என்றே சொல்ல வேண்டும்.
இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் பின்னணியில் இயங்கும் சூத்திரதாரி இஸ்ரேல் என்பது இப்போது பகிரங்கமாகியுள்ளது.
ஈரானை உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு, அமெரிக்காவின் அதிகார மையங்களுக்கு இஸ்ரேல் கொடுத்த அழுத்தம் சாதாரணமானதல்ல. “இப்போதே அடியுங்கள், இல்லையென்றால் ஆபத்து நமக்கல்ல, உங்களுக்கே!” என்ற ரீதியில் வெள்ளை மாளிகையை இஸ்ரேல் மிரட்டிக் கொண்டிருக்கின்றது.
அணு ஆயுதப் பொத்தானை டிரம்ப் நெருங்கியதற்குப் பின்னால், மொசாட் அமைப்பின் ரகசியத் தகவல்களும், இஸ்ரேலியத் தலைவர்களின் இடைவிடாத தொலைபேசி அழைப்புகளுமே உந்துசக்தியாக இருந்தன என்பது நிதர்சனம்.
ஒரு தேசத்தின் பிடிவாதத்திற்காக ஒட்டுமொத்த உலகத்தையும் பலிகொடுக்கத் துணிந்த இந்த ஆட்டம், மனிதகுலத்தையே சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்லவிருந்தது.
இப்போதைக்கு, ஜெனரல் டான் கெய்ன் போன்ற சில அதிகாரிகளின் துணிச்சலால், இஸ்ரேலால் மூட்டப்பட்ட அந்த ‘மூன்றாம் உலகப்போர்’ எனும் தீ தற்காலிகமாக அணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது நிரந்தரமான அமைதி அல்ல. ஈரான் மீதான இஸ்ரேலின் வன்மமும், அமெரிக்காவின் அதிகாரப் பசியும் அடங்காதவரை, அந்த அணு ஆயுதப் பொத்தான் எப்போது வேண்டுமானாலும் அழுத்தப்படலாம்.
மூன்றாம் உலகப்போர் நிறுத்தப்படவில்லை; அது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!



