News

வெசாக் வாரத்தில் வரும் ஹஜ்ஜுப் பெருநாள் ஊழ்ஹிய்யா கிரியைகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துக!



– அரசிடம் சமூக நீதிக் கட்சி கோரிக்கை

சமூக வலைதளங்களில் மீண்டும் திட்டமிட்ட முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரமொன்று அரசியல் மற்றும் ஏனைய அடைவுகளை இலக்காகக் கொண்டு ஒரு சில இனவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

இம்முறை புனித ஹஜ்ஜுப் பெருநாள் மே மாதம் 28 ஆம் திகதி அல்லது 29 ஆம் திகதி வருகின்றது. இது தற்போது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வெசாக் வாரத்தில் வருகிறது. புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமானது உழ்ஹிய்யா கடமைகளோடு தொடர்புபட்டது. ஆகவே மேற்குறிப்பிட்ட மேலெழும் இனவாத சூழ்நிலையினை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக வருகின்ற நாட்களில் உழ்ஹிய்யா கடமைகளை நடக்க விடாமல் தடுக்க வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படக் கூடும். ஆகவே முஸ்லிம்கள் தமது புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தினை சுமுகமாக கொண்டாடவும், உழ்ஹிய்யா கடமைகளை சுமுகமாக நிறைவேற்றவும் உரிய ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக நீதிக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.

சமூக நீதிக் கட்சி.
23.04.2026.

#socialjusticeparty

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button