News
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் நோக்கில், திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீடு PUCSL இடம் ஒப்படைக்கப்பட்டது

மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீடு PUCSL இடம் ஒப்படைப்பு.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் நோக்கில், திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை தேசிய முறைமை செயல்பாட்டாளர் (தனியார்) நிறுவனம், இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையே இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


