News

அறுகம்பையில் பாணந்துறையைச்
சேர்ந்த 7 முஸ்லிம் இளைஞர்கள் கைது

பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள்,  வியாழக்கிழமை பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 28 வயது மதிக்கத்தக்கவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அறுகம்பை பிரதேசத்திற்கு வியாழக்கிழமை காலை வருகை தந்த குறித்த இளைஞர்கள், இப்பிரதேசத்தில் முன்னர் செயற்பட்ட சபாத் இல்லம் தொடர்பில் விசாரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு வந்த பொத்துவில் பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button