News

இஸ்ரேலிய சுற்றுல்லாப் பணிகளுக்கு  பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகள் வழங்கப்படும்  ; இஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிப்பு

இஸ்ரேலிய சுற்றுல்லாப் பணிகளுக்கு  பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகள் வழங்கப்படும்  ; இஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிப்பு

இலங்கையிலுள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் இஸ்ரேலிய தூதுவர் ரூவேன் அசார் கோரிக்கை விடுத்துள்ளார்.

புது டில்லியினை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். இதன்போது, அவர் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத்தை அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதேவேளை, இஸ்ரேலியர்களின் முதன்மையான சுற்றுலாத்தலமாக இந்த வருடம் இலங்கை விளங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் இங்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் இஸ்ரேலிய தூதுவர் கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்தும் இலங்கையும் மிகவும் விருப்பமான இடங்களாக உள்ளன என தூதுவர், அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகம மற்றும் அருகம்பே ஆகிய பிரதேசங்கள் இஸ்ரேலிய சுற்றுல்லாப் பணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாகும் என அமைச்சர் விஜித ஹேரத் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய சுற்றுல்லாப் பணிகள் இலங்கையில் இனிமையாகத் தங்குவதை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

-நன்றி: சன்டே டைம்ஸ்-

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button