அரசாங்கத்தின் “பித்தலாட்டமான முடிவுகளால்” பௌத்த – முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் பாரிய அச்சுறுத்தல்…
வெசாக் வாரத்தை முன்னிட்டு சில உள்ளூராட்சி சபைகளினால் மாடுகளை அறுப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், முஸ்லிம் மக்கள் தமது மதக் கடமைகளைச் செய்ய முடியாமல் போகும் என்றும், அதன் மூலம் ஏற்படும் அதிருப்தியைத் தீவிரவாத சக்திகள் தூண்டுதலாகப் பயன்படுத்தி நாட்டில் மதவாதத்தைத் தூண்டிவிடக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ” (குழப்பமான) மற்றும் “பித்தலாட்டமான” முடிவுகள் என கடுமையாக விமர்சித்த சமரவீர, இது மக்களின் “கலாசார அடையாளங்களை” அறியாத ஒரு “முட்டாள் அரசாங்கத்தின்” செயல் எனவும் வர்ணித்தார்.
மே 28ஆம் தேதி ஹஜ் பெருநாள் முடிந்த பின்னர் வெசாக் வாரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இரு தரப்பினரும் தமது மதக் காரியங்களைச் சுதந்திரமாகச் செய்ய முடியும் எனவும், அதன் மூலம் பல வருடங்களாக நிலவி வரும் பௌத்த – முஸ்லிம் சகோதரத்துவம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாரிய நிலைமையைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும், மத மோதல்களுக்கான வாய்ப்புகளைத் தடுக்குமாறும் மகாநாயக்க தேரர்களிடமும் மகா சங்கத்தினரிடமும் அவர் கௌரவத்துடன் கோரிக்கை விடுத்தார்.
ஜயந்த சமரவீர
தேசிய அமைப்பாளர்
தேசிய சுதந்திர முன்னணி


