News

தலைக்கவசங்களும் அணியாமல், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் மூன்று இளம் பெண்கள்.. வலை விரித்தது பொலிஸ்

தலைக்கவசங்கள் அணியாமல் மோட்டார் சைக்கிளில் மூன்று இளம் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கும் சமூக ஊடக வீடியோ தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


காவல்துறையினரின் கூற்றுப்படி, கடந்த சில நாட்களில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, புதத்தல காவல்துறை நிலையத்தின் ஊடாக இலங்கை காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.


விசாரணைகளின் மூலம் மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், அதனைச் செலுத்தியவர் மற்றும் அதில் பயணித்த ஏனைய இரு இளம் பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்புகலை, ஹிடிக்கிவுல மற்றும் உனவடுன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 23 வயதுடைய யுவதியிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என காவல்துறை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.


இதற்கமைய, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் இன்றி இருவரை ஏற்றிச் சென்றமை, மேலதிக பயணிகளை ஏற்றிச் சென்றமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் நாளை (மே 11) வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.


ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒருவரை வாகனம் செலுத்த அனுமதித்தமைக்காக மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.


புத்தல காவல்துறை நிலையத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button