News

மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து ஏயார் ரைபிளால் மனைவியை சுட்டுவிட்டு கணவன் தப்பியோட்டம் #இலங்கை

மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினரிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் போது, மதுபோதையில் இருந்த கணவன், தனது மனைவியையும் மகளையும் துப்பாக்கியால் சுடப்போவதாக மிரட்டியுள்ளார். பின்னர், அவர் கையில் வைத்திருந்த ஏயார் ரைபிள் (Air Rifle) ரகத் துப்பாக்கியால் மனைவியைச் சுட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். எனினும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button