அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்தது – சில வங்கிகளில் விற்பனை விலை 325.21 ரூபாயாக அதிகரித்தது

இன்று (11) இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், விற்பனை விலை 325 ரூபாயாக நிலையாக உள்ளது.
செலான் வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் மாற்றமின்றி முறையே 317.25 ரூபாய் மற்றும் 325 ரூபாயாகக் காணப்படுகின்றன.
என்.டி.பி (NDB) வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 318 ரூபாயிலிருந்து 318.25 ரூபாயாகவும், விற்பனை வீதம் 324.50 ரூபாயிலிருந்து 324.75 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 318.10 ரூபாயிலிருந்து 318.20 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை வீதமும் 325.11 ரூபாயிலிருந்து 325.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் மாற்றமின்றி முறையே 316.53 ரூபாய் மற்றும் 325 ரூபாயாகக் காணப்படுகின்றன.
சம்பத் வங்கியில், கொள்வனவு வீதம் 318.25 ரூபாயிலிருந்து 318.50 ரூபாயாகவும், விற்பனை வீதம் 324.75 ரூபாயிலிருந்து 325 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.



