News
2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்போம் – திட்டங்களையும் தயாரித்து விட்டோம் ; இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர்

“2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளோம்” என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைப்புக்கள், உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பாணைகள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



