23 வயது மகனை தன் இரண்டாம் மனைவியின் குடும்பத்துடன் இணைந்து கொன்ற தந்தை – கண்டி பொலிஸ் பிரிவில் பதிவான சம்பவம்

கண்டி, கிவுல்லிந்த பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 23 வயதுடைய ஹென்னன்கெதர சுசந்த பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தந்தையும் அவரது இரண்டாவது மனைவியின் மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் தமது வீட்டிற்கு முன்னால் சிறிய உணவகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி, அருகில் உள்ள நீரோடை ஒன்றில் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனைத் தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



