News

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (Colombo Stock Exchange-CSE)  பற்றிய ஒரு பார்வை

CSE  ல் அண்ணளவாக 300 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அவற்றின் பெயர்களின் இறுதியில் PLC (Public Liability Company) என குறிப்பிடப் பட்டிருக்கும் Eg. Abans Electricals PLC (ABAN.N0000) , Amana Bank PLC (ABL.N0000) மற்றும் அவற்றிற்கு மேலே அடைப்பினுள் உள்ளவாறு ஒரு குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இது அக் கம்பனிகளை CSE website ல் இலகுவாக   கண்டு கொள்வதற்கும் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளில் (Trading) இக் குறியீடுகளே பயன்படுத்தப்படும்.

இதில்  .N0000 என்று வருபவை Voting ஐயும்,  .X0000 என்று வருபவை Non Voting யினையும் குறிக்கும்.
Eg. Vidulanka PLC (VLL.N0000 & VLL.X0000)
இதில் VLL.N0000 இன் பங்குகளை நாம் வைத்திருந்தால் AGM ல் (Annual General Meeting) voting போட தகுதி கிடைக்கும்.

ஒரு தனியார் கம்பனியை (PVT LTD) CSE ல் பதிவு செய்ய முக்கிய காரணங்களில் ஒன்று யாதெனில், உதாரணமாக நாம் ஒரு தனியார் கம்பனியை நடத்தி செல்கிறோம், இக் கம்பனியை நாடு பூராகவும் நிறுவி இதனை இன்னும் மேம்படுத்தி இன்னும் அதிக இலாபமீட்டக் கூடிய யுக்திகள் (Ideas) நம் வசம் இருந்த போதிலும் அதற்கான பண முதலீட்டு வசதிகள் எம்மிடம் போதாமலுள்ளதையொட்டி, வங்கிகளில் வட்டியினூடாக கடனை பெறாமல், நம் கம்பனியை CSE ல் பதிவு செய்து நமது கம்பனியின் பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்து பண முதலீட்டை பெற்றுக் கொள்ள முடியும். (இவை அனைத்துக்கும் CSE ல் சில நிபந்தனைகள் உண்டு) . இவ்வாறு பதிவு செய்வதனை Initial Public Offering-IPO என அழைக்கப்படும். (Eg. PickMe IPO price on listing Oct 2024-36Rs, Current Market price around 160 Rs)

இவ்வாறு CSE ல் கம்பனியை பதிவு செய்தால், அக் கம்பனியின் அனைத்து பரிவர்த்தனைகளும் பகிரங்கமாக  (Transperancy) மக்களுக்கு அறிவிக்க வேண்டும் (வருடாந்த கணக்கறிக்கை மற்றும் மூன்று மாதங்களுக்கான ( Quarter) கணக்கறிக்கை (Statement of P&L, Statement of Financial Position, Statement of Cash Flow, Major Share Holders etc..)

இறுதியாக வெளியான கணக்கறிக்கை அதற்கு முன்னர் வெளியான கணக்கறிக்கையை விட இலாபம் கூடுதலாக ஈட்டப்பட்டிருப்பின், அக் கம்பனியின் பங்குகளை அனைவரும் வாங்க முடற்படுவதனால் அப் பங்குகளுக்கு கிராக்கி (Demand) அதிகரிப்பதனால் அப் பங்கின் விலை அதிகரிக்கக் கூடும்.

மேலும் ஒரு பங்கினை வாங்கும் போதும் (1.12%) விற்கும் போதும் 1.12% fees அறவிடப்படும். (Eg. 100 ரூபாவிற்கு ஒரு பங்கினை வாங்கினால் அதனை 102.24 ரூபாவிற்கு விற்பனை செய்தால் மாத்திரமே உங்களுடைய முதலீடு 100 ரூபாய் கிடைக்கும்)

மேலும் பங்குகளில் முதலிடுவது எவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது (Based on Sharia Compliance) என்பதனையும், இன்னும் விபரமாக இவற்றை ஆராய்வதற்கும், உலகில் எங்கு இருந்தாலும் மிகவும் இலகுவாக நீங்கள் எவ்வாறு CSE ல் உங்கள் கணக்கை மொபைல் போனூடாக (Smart Phone) ஆரம்பிக்க முடியும் என்பவற்றையும் Online Zoom Session ஊடாக வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இலங்கை நேரம் இரவு 9.30-11.30 வரையிலான காலப்பகுதியில் ஆராயப்படும்.

MSM. Shafnas
B.Sc (Hons) in Q.S (UoW)
Advance Diploma in Financial Markets (CSE)
5+ Years QS Experience in UAE
5+ Years Full Time Trading Experience in CSE
0755092523

Facebook Link- https://www.facebook.com/share/1BhU21JD3V/

WhatsApp Link- https://wa.me/qr/AJNIAEBCZPP6I1

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button