முக்கொலைச் சம்பவம் ஒன்றில் கைதாகி பிணையில் வந்த நபரின் தலையை து*ண்டித்து, சிலையொன்றில் தொங்கவிட்டு சென்ற நபர்கள் – அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணை

நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடு, அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள சிலையொன்றில் தொங்கவிடப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, நேற்று நள்ளிரவு மூன்று நபர்கள் அவரது வீட்டிற்கு வந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, அவரைக் கொலை செய்து தலையைத் துண்டித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை பிரதம நீதவான் வை.ஆர்.பி. நெலும்தெனிய முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், உயிரிழந்தவரின் வீட்டிற்கு முன்னால் இருந்து துப்பாக்கி ஒன்றையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரின் மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் மாமா ஆகியோர் வீட்டிலிருந்தனர்.
தாக்குதலின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


