News

விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த நடுத்தர வயது நபர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் பதிவு… பொலிஸார் விசாரணை #இலங்கை

மஹியங்கனை நகரில் உள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் ஹசலக பகுதியை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர், ஹங்குரான்கெத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் தங்குவதற்காக இந்த விடுதி அறையை முன்பதிவு செய்துள்ளார். குறித்த பெண்ணை அவர் சமீப காலத்திலேயே அறிமுகம் செய்துகொண்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த பெண் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button