News

தாய்லாந்தில் இருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குமார்களை மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

தாய்லாந்தில் இருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குமார்களை மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர இன்று உத்தரவிட்டார்.


கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாய்லாந்தில் இருந்து வருகை தந்த போது, அவர்களது பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அமிதானந்தா என்ற பிக்கு ஒருவரால் இந்த கடத்தல் நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போதே குறித்த பிக்குகள் குழுவினர் விமான நிலைய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 23 பேரும் இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button