News

நாட்டுக்கு சொந்தமான மற்றுமொரு தொகை பணம் மாயம்… தவறான வங்கிக் கணக்கிற்கு வைப்பிடப்பட்டு பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் முடியாமல் போயுள்ள நிலை..

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளை மேற்கொண்ட நிதிப் பரிமாற்றத்தின் போது 8 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் தவறான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விசேட வெளிப்படுத்தலொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

துபாயிலுள்ள முகவர் நிறுவனமொன்றுக்கு செலுத்த வேண்டிய மாதாந்தக் கொடுப்பனவு இவ்வாறு தவறுதலாக வேறு வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கொடுப்பனவு எமிரேட்ஸ் என்.பி.டி (Emirates NBD) வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளை அந்தப் பணத்தை அபுதாபி இஸ்லாமிய வங்கியின் (Abu Dhabi Islamic Bank) கணக்கில் வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள தொகை 974,500 டிர்ஹம் ஆகும், இது இலங்கை ரூபாயில் எட்டு கோடிக்கும் (80 மில்லியன்) அதிகமானதாகும்.

வேறு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்ட இந்தப் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை அரசாங்கம் தலையிட்டு உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார். வீடியோ https://youtu.be/py-V1fOqZHs

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button