News
எனது பொறுமையின் எல்லை மீறிவிட்டது – ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் தொடர்பான போர்ச் சூழ்நிலையில் தனது பொறுமை எல்லையை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான இரண்டு நாள் உத்தியோகபூர்வ சந்திப்பை நிறைவு செய்து பீஜிங் நகரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய நெருக்கடியை தணிக்க ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கின் பாதுகாப்பு, எரிசக்தி விநியோகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



