உலக இராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ள ரஷ்யாவின் “சாத்தான்-2” கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
✍️ முகிந்தன் துரைராஜசிங்கம்
உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எப்போதுமே தனது காய்களை மிகவும் ஆக்ரோஷமாக நகர்த்தக்கூடியவர்.
தற்போது உக்ரைன் போரின் பின்னணியில், மேற்கத்திய நாடுகளுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்யா தனது அணுஆயுத பலத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
மேற்கத்திய நாடுகளால் “சாத்தான்-2” (Satan II) என்று அழைக்கப்படும், ரஷ்யாவின் புதிய தலைமுறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான RS-28 Sarmat இன் சமீபத்திய சோதனை வெற்றி பெற்றுள்ளதாக புதின் அறிவித்துள்ளார்.
“இது உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை” என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் இது முழுமையான இராணுவப் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளற்ற இந்த புதிய அணுஆயுதப் போட்டி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
சர்மத் (Satan-2) ஏவுகணை என்பது வெறும் ஒரு ஆயுதம் அல்ல; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தையே சில நிமிடங்களில் சாம்பலாக்கக்கூடிய ஒரு பேரழிவு ஆயுதம்.
இதன் தொழில்நுட்பக் காரணிகள் ராணுவ வல்லுநர்களையே வியப்பில் ஆழ்த்துகின்றன:
பூமியின் எந்தவொரு மூலையையும் குறிவைத்துத் தாக்கும் அளவுக்கு இதன் Range மிக அதிகம். 35,000 கிலோமீட்டர் பாயும் திறன் கொண்டது.
Suborbital Flight என அழைக்கப்படும் இந்த ஏவுகணை விண்வெளியின் கீழ் அடுக்கு வரை சென்று, அங்கிருந்து மணிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் இலக்கை நோக்கிப் பாயும்.
மேற்கத்திய நாடுகளிடம் உள்ள மிகச்சிறந்த அணுஆயுதங்களை விட, இதன் ஒற்றை ஏவுகணையின் ஒட்டுமொத்த வெடிதிறன் (Warhead Yield) நான்கு மடங்கு அதிகம்.
ஒரே ஒரு சாத்தான்-2 ஏவுகணையால், பிரிக்கப்படக்கூடிய 10-க்கும் மேற்பட்ட அணுஆயுதக் குண்டுகளை (MIRV) சுமந்து செல்ல முடியும்.
மேலும், ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய ‘Avangard ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் இதில் பொருத்த முடியும்.
அமெரிக்கா தனது பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்து, உலகின் அதிநவீன ஏவுகணைத் தடுப்புக் காப்புகளை (Missile Defense Shields) உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், சாத்தான்-2 ஏவுகணை இந்தத் தடுப்பு அரண்களை வெறும் காகிதம் போலக் கிழித்தெறியும் வல்லமை கொண்டது.
அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் அனைத்தும், ரஷ்யா வட துருவத்தின் வழியாகத் தாக்கக்கூடும் என்ற கணிப்பிலேயே வடக்குப் பகுதியை நோக்கியே கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், Satan-2 ஏவுகணை அதன் அபார தூரத் திறனால், யாரும் எதிர்பாராத தென் துருவத்தின் வழியாகச் (South Polar Routin) சுற்றி வந்து அமெரிக்காவைத் தாக்கக்கூடியது. இதனால் அமெரிக்காவின் தற்போதைய ரேடார்களும் ஏவுகணைத் தடுப்புகளும் முற்றிலும் பயனற்றதாகிவிடும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா மிக அருகில் உள்ளதால், புதினின் இந்த அணுஆயுத நவீனமயமாக்கல் ஐரோப்பாவை நேரடியாகப் பணயக்கைதியாக மாற்றியுள்ளது.
புதின் தனது உரையில், Satan-2 உடன் சேர்த்து, ஐரோப்பாவின் எந்தவொரு பகுதியையும் நொடிப் பொழுதில் தாக்கக்கூடிய இடைநிலை ஏவுகணையான ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik), அணுசக்தியால் இயங்கும் மற்றும் கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய ‘பொஸைடன்’ (Poseidon) underwater ட்ரோன் மற்றும் ‘புரவெஸ்ட்னிக்’ (Burevestnik) Cruise ஏவுகணைகளும் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவை அனைத்தும் ஐரோப்பிய கண்டத்தை எப்போதும் ஒரு பதற்ற நிலையிலேயே வைத்திருக்கப் பயன்படுகின்றன.
உலகில் உள்ள ஒட்டுமொத்த அணுஆயுதங்களில் 90%-க்கும் அதிகமானவை ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடமே உள்ளன.
இரு நாடுகளும் தங்களின் அணுஆயுத எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பயன்படுத்திய கடைசி ஒப்பந்தமான New START கடந்த பிப்ரவரி மாதத்துடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவாக, தற்போது இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு அணுஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமும் நடைமுறையில் இல்லை.
தற்போதைய நிலவரப்படி:ரஸ்யா 4300 ஏவுகணைகளையும் , அமெரிக்கா 3700 ஏவுகணைகளையும் வைத்துள்ளன.
2001-ம் ஆண்டு அமெரிக்கா ஏவுகணைத் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய போதே, எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் தள்ளப்பட்டுவிட்டோம்” என்று புதின் இந்த ஆயுதப் போட்டியை நியாயப்படுத்துகிறார்.
இத்தனை காலமாக “நாங்கள் தான் உலக போலீஸ், எங்களை யாராலும் அசைக்க முடியாது” என்று கொட்டமடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆணவத்திற்கு, புதினின் ‘சாத்தான்-2’ ஒரு மரண அடியாக விழுந்துள்ளது.
Satan -2′ என்பது வெறும் ஆயுதம் அல்ல; அது இந்த ஒட்டுமொத்த மனித நாகரிகத்திற்கும் எழுதப்பட்ட மரண சாசனம்.
உலகின் ஏதோ ஒரு பாதாள நிலவறையில், புதினின் விரல் நுனியில் இருக்கும் அந்த ஒற்றைச் சிவப்புப் பொத்தான் அழுத்தப்பட்டால், அடுத்த சில நிமிடங்களில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் சுடுகாடாக மாறும்.
அமெரிக்கா எவ்வளவு பில்லியன் டாலர்களைக் கொட்டிப் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கினாலும், அதைத் தென் துருவப் பாதையின் வழியே வந்து தவிடுபொடியாக்கும் வல்லமை ரஷ்யாவின் இந்த பிரம்மாஸ்திரத்திற்கு உண்டு.
அமெரிக்காவின் உலகளாவிய ஒற்றை ஆதிக்கக் காலத்திற்கு ரஷ்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளதை இந்த அணுஆயுத நவீனமயமாக்கல் உலகிற்கு உரக்கச் சொல்கிறது!



