News

“வெளிநாட்டுக்குச் செலுத்திய மேலும் 8 கோடி ரூபாவை ஹேக்கர்கள் சுருட்டியுள்ளனர்.. விசாரணைகள் நடக்கிறது..- அமைச்சர்”

“ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் துபாயில் உள்ள விநியோகஸ்தர் (சப்ளையர்) ஒருவருக்கு அனுப்பிய 8 கோடி ரூபா பணம் ஹேக்கர்களால் (Hackers) மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணத்தைப் பெற வேண்டிய தரப்பினரின் மின்னஞ்சல் முகவரியை (Email) ஹேக்கர்கள் கைப்பற்றி, அதனை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்த நிதி மோசடியை மேற்கொண்டுள்ளனர்.

இது ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமான டிர்ஹாமில் (Dirham) செலுத்தப்படவிருந்த ஒரு பரிவர்த்தனை எனத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது குறித்து விரைவில் அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இது தொடர்பாக ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டு இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த நிதி மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.”

Recent Articles

Back to top button