News
NPP பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்

தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியே காரைச் செலுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, விபத்துத் தொடர்பாகக் காரின் சாரதி ஹினிதும பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


