News இந்தியாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நான் இலங்கை திரும்பியவுடன்
இந்தியாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நான் இலங்கை திரும்பியவுடன்
கட்டாயமாக கைது செய்யப்படுவேன் என அர்ச்சுனா M P அறிவிப்பு

சர்ச்சைக்குரிய வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து, அவர்களின் கொள்கைகளை நியாயப்படுத்தி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, இலங்கை திரும்பியதும் தான் கைது செய்யப்படலாம் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது கருத்துக்கள் மற்றும் மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்த குறிப்புகள் இலங்கையின் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் எனக் கூறி, இலங்கை வந்தடைந்தவுடன் தான் “கட்டாயமாக கைது செய்யப்படுவேன்” என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.



