News

மஹசோன் பலகாய அமைப்பின் முன்னாள் தலைவர் அமித் வீரசிங்கவும், பெண் ஒருவரும் பண மோசடி தொடர்பில் தெல்தெனிய பொலிஸாரால் கைது

மஹசோன் பலகாய (Mahasohon Balakaya) அமைப்பின் முன்னாள் தலைவர் அமித் வீரசிங்க, இன்று (17) கண்டி, தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்தெனிய பொலிஸாருக்குக் கிடைத்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கபானா (Cabana) திட்டமொன்றைக் கூறி மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பண மோசடிக்கு ஆதரவாக பற்றுச்சீட்டுகளை (Receipts) வழங்கியதாகக் கூறப்படும் பெண் சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குமாறு அமித் வீரசிங்கவிற்கு தெல்தெனிய பொலிஸார் அழைப்பு விடுத்திருந்த நிலையில், வாக்குமூலம் வழங்கியதை அடுத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button