அம்பாறையில் சட்டவிரோத மதுபான விற்பனையை பொலிஸார் சுற்றி வளைக்க சென்ற போது ஏற்பட்ட களேபரம்… பொலிஸ் உத்தியோகத்தரும் காயமைடைந்து வைத்தியசாலையில்

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் நேற்றிரவு (17) கைதுசெய்யச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.
இதன்போது, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரைக் கைதுசெய்ய முற்பட்டபோது, சந்தேகநபர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோதே குறித்த துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



