1915 இல் மரண தண்டனை வழங்கப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு தற்போது ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டது
ஜூன் 25, 1915 இல் அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையைத் தொடர்ந்து, ஜூலை 7, 1915 இல் தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு தற்போது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 33 (h) மற்றும் 34 ஆவது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, கலவரம் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் அநியாயமாகக் குற்றஞ் சாட்டப்பட்ட பெத்ரிஸின் தவறான மரணதண்டனையை சரிசெய்யக் கோரி மன்னிப்பு
வழங்கினார்.
2023 டிசம்பரில் பெட்ரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி வழங்குவதற்காக பெட்ரிஸின் மரணதண்டனையின் சூழ்நிலைகளை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சரவைக்கு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது