News

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளம்பெண்களை சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பொலிஸார்

நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாவுல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நீர்த்தேக்கத்தின் நீரை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பின்னர் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய இரு பெண்களையும் மீட்டு முதலுதவி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விபத்தில் சிக்கிய இரு பெண்களும் கொங்கஹவெல மற்றும் காகம பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button