News
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பு நகர சபை மைதானம் இஸ்லாமிய கலை, கலாச்சாரங்களோடு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பு நகர சபை மைதானம் இஸ்லாமிய கலை, கலாச்சாரங்களோடு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு மாநகர சபையில் 2021 ஆம் ஆண்டு முதல்வராகவிருந்த ரோசி சேனாநாயக்காவின் கவனத்திற்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் மீலாதுன் நபிதினம் சம்பந்தமான பிரேரணையைக் ஒன்றை சபையில் சமர்ப்பித்திருந்தார் சபை அதனை ஏற்றுக்கொண்டதையடுத்து ஒவ்வொரு வருடமும் மீலாதுன் நபிவிழா நிதழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் இவ்வருடத்திற்கான நிகழ்வுளும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாநகர சபையின் ஆணையாளரின் ஒத்துழைப்புடன், உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் பெரும் பாங்காற்றி வருவதையிட்டு பிராந்திய மக்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.