News
YMMA ஏற்பாட்டில் மடவளையில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.அமைப்பின் மடவளைக் கிளை 18 வது வருடமாகவும் ஒழுங்கு செய்த இரத்ததான நிகழ்வு இன்று (16ம் திகதி) மடவளை NODAH மண்டபத்தில் இடம் பெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.அமைப்பின்
மடவளைக் கிளைத் தலைவர் றிசாட் லதீப் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வை.எம்.எம்.ஏ.அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் ரிஸ்மி ஷஹீத், பொதுச் செயலாளர் A.M. ஹசன் பிராஸ் உற்படப் பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
466 ஆண்கள் மற்றும் பெண்கள் பதிவு செய்த இந்த இரத்ததான நிகழ்வில் 405 பேர் இரத்த தானம் செய்தனர்.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் காணலாம்.