News
அனுரகுமார 20 இலட்சம் வாக்குகளும் பெற மாட்டார் – சஜித் பிரேமதாச 70 இலட்சம் வாக்குகள் பெறுவார் ; தயாசிரி ஜயசேகர

இப்போது எமது முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்க தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.. அவரின் இயலும் ஸ்ரீலங்கா பிரச்சாரத்தை நிறுத்தி விட்டார் – இயலும் ஸ்ரீலங்கா பிரச்சார நடவடிக்கைகளை செய்துவந்த பிரச்சார குழுவினர் இப்போது எங்களுடன் உள்ளனர் என சஜித் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும் அனுரகுமார இப்போது பேஸ்புக்கில் ஜனாதிபதி ஆகி விட்டார். முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்டவர்களுக்கு பணம் கொடுத்து தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சாரம் செய்து போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். அத்துடன் அவர் 20 இலட்சம் வாக்குகளும் பெற மாட்டார் – சஜித் பிரேமதாச 70 இலட்சம் வாக்குகள் பெறுவார் என தெரிவித்தார்.

