News
கூட்டங்களுக்கு ஆட்களை இழுக்க தனியார் பஸ்களுக்கு மாத்திரம் 200 கோடி செலவிட்ட அரசியல் கட்சிகள் !
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு கூட்டங்களுக்கு ஆட்களை இழுக்க தனியார் பஸ்களுக்கு மாத்திரம் சுமார் 200 கோடி ருபாவை அரசியல் கட்சிகள் செலவிட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இன்றைய கடைசி தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள ஆட்களை இழுக்க 1500 பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆறு மாதங்களாக தங்கள் கூட்டங்களுக்கு ஆதரவாளர்களை அழைத்து வர பாரிய அளவில் பயன்படுத்திவருதாக கூறப்பட்டது.