News
பலசரக்குக் கடைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய கடை உரிமையாளர் மரணம்
கொஹுவல, சரணங்கர மாவத்தையில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் தெஹிவளை நெடிமலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்