பதவியேற்புக்குரிய இடம் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை நடத்துகிறார் ; முஷாரப் MP

பேச்சு சிறந்ததுதான் .ஆனால் மௌனம் சாதிக்கவல்லது. 2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவும் அதைத்தான் சொல்லப் போகிறது. அமைதி காத்த 30 சதவீத மக்களும் தீர்மானித்துவிட்டனர் என ரணில் விக்ரமசிங்க ஆதரவு MP முஷாரப் தெரிவித்துள்ளார்.
மாற்றம் ஒன்று நிகழத்தான் போகிறது. சமூக வலைத்தள ரெல்்லைக்கு பின்னால் சென்று ஏமாந்த கதை 69 இலட்சம் பேருடனும், கோட்டா ஆட்சியுடனும் முடியட்டும். இம்முறை அதற்கு மாற்றமாக உணர்ச்சிகளை புறந்தள்ளி அறிவார்ந்த முடிவை அமைதி காத்த மக்கள் எடுக்கத்துணிந்துவிட்டனர்.
நாலாபுறமிருந்தும் வரும் செய்திகள் ஒன்றாகவே இருக்கிறது.
“ சடுதியான மாற்றம், தலைகீழ் மாற்றம், மக்கள் நன்றி மறக்கவில்லை. இது விஷப் பரீட்சை செய்யும் நேரமில்லை. விபரீதங்கள் நிகழாமல் நாட்டை தொடர்ந்தும் கொண்டு செல்வோம். “
அவர்களால் முடியுமா? என்ற ஆய்வைவிட , இவரால் மட்டுமே முடிந்தது என்பது நிஜம். மக்கள் நிஜத்தின் வழியில்.
ஜனாதிபதி பதவியேற்புக்குரிய இடம் தொடர்பில் ஆலோசனை நடத்துகிறார். நான் நாளைய தினம் வாக்களிக்க ஊர் திரும்புகிறேன். கொழும்பின் காலநிலை மிக மிருதுவாகவே இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

