மருத்துவ பரிசோதனைகளுக்காக பஷில் ராஜபக்ச வெளிநாடு சென்றதாகவும், பொதுத் தேர்தலில் கட்சிக்கு தலைமை தாங்க விரைவில் நாடு திரும்புவார் எனவும் மொட்டு செயலாளர் விளக்கம்
இன்று (20) காலை அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர், மருத்துவ பரிசோதனைக்காகவே பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றதாக குறிப்பிட்டார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாடுஅமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இறுதித் தருணம் வரை இரவு பகலாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பொதுத் தேர்தலுக்கு தலைமை தாங்குவதற்காக விரைவில் நாடு திரும்புவார்.
இதேவேளை, நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் இன்று (20) காலை தனது மாமியார் மற்றும் மாமனாருடன் வெளிநாடு சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.