பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்வதற்கு பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவரத்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 29ம் திகதி பொதுஜன பெரமுன அரசியல் குழு கூட்டத்தில் குறித்த கட்சியின் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அவர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அகில இலங்கை செயற்குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் அரசியல் குழுவின் உறுப்புரிமை உட்பட கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

